கன்னியாகுமரியில் சமையல்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
கன்னியாகுமரியில் சமையல்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கன்னியாகுமரி:
பணகுடி அருகே உள்ள தண்டையார்குளம் பகுதியை சேர்ந்தவர் சங்கரபாண்டி (வயது 37). இவர் கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜில் தங்கி இருந்து கன்னியாகுமரி ரத வீதியில் உள்ள ஓட்டலில் சமையல்காரராக வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலையில் சங்கரபாண்டி வேலையை முடித்துவிட்டு சம்பளத்தை வாங்கி விட்டு ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு தங்கி இருந்த லாட்ஜுக்கு சென்றார். அவரை பார்ப்பதற்காக அவருடன் வேலைபார்க்கும் ஒருவர் அவரது அறைக்கு சென்று அறை கதவை தட்டினார். ஆனால் வெகுநேரமாகியும் அறை கதவு திறக்கவில்லை. பின்னர் அறையின் ஜன்னல் கதவை திறந்து பார்த்தபோது சங்கரபாண்டி வேட்டியில் தூக்குப்போட்டு தற்ெகாலை செய்து கொண்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே இதுகுறித்து கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சங்கரபாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.