குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது


குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது
x

நாட்டறம்பள்ளி அருகே குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த கே.பந்தரப்பள்ளி சம்பல் கொள்ளி பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சசிகலா (வயது 40). இவர்களது குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயசந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 1 மணி நேரம் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர்.

மின்கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்ததா? என நாட்டறம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story