குடிசை வீடு எரிந்து சாம்பல்
சோளிங்கரில் குடிசை வீடு எரிந்து சாம்பல்
சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்குட்பட்ட ஸ்ரீராம் நகரை சேர்ந்த செல்வி ராமதாஸ் என்பவர் தென்னை ஓலை குடிசை வசித்து வருகிறார்
இதில் மின்சார கசிவு காரணமாக வீட்டில் மேல் கூரை முழுவதுமாக தீயில் கருகி சாம்பல் ஆனது.இதில் வீட்டில் இருந்த டிவி, பிரிச், அரிசி, மளிகை பொருட்கள், உடைகள் உள்ளிட்ட அனைத்தும் தீயில் கருகியது.
அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்து அனைவரும் உயிர் தப்பிள்ளனர்.
தகவல் அறிந்த சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம். முனிரத்தினம், நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, நகராட்சி துணை தலைவர் பழனி, திமுக மாவட்ட அவைத் தலைவர் அசோகன், நகராட்சி ஆணையர் பரந்தாமன், வட்டாட்சியர் கனேஷன், நகராட்சி வார்டு உறுப்பினர் அருண்ஆதி ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறி அரிசி மளிகை பொருட்கள் நகராட்சி தலைவர் சார்பில் 5 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கினார்கள்.
மேலும் வீட்டிற்கு மேற்குறை அமைத்து தருவதாக உறுதி அளித்தனர்.
அப்போது நகராட்சி வார்டு உறுப்பினர் மோகனா சண்முகம், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ராமன் செங்கல் நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் வடிவேல், கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயவேலு, கணேஷ் மற்றும் அரசு அலுவலக உடன் இருந்தனர்.