குடிசை வீடு எரிந்து நாசம்
நாட்டறம்பள்ளி அருகே குடிசை வீடு எரிந்து நாசமானது.
நாட்டறம்பள்ளியை அடுத்த பூசாரியூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 51). இவரது வீடு அருகே அவரது மகள் தனிமையில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு ராஜா மதுபோதையில் மகளின் குடிசை வீட்டிற்கு சென்று தகராறு செய்து கொண்டு இருந்தார் அப்போது ராஜா கையில் வைத்து இருந்த சிகரெட் தவறி கீழே விழுந்தது. இதனால் குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது.
உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு வெளியே வந்தனர் அதன்பிறகு தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து பொதுமக்கள் உடனடியாக வாணியம்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்றனர். அதற்குள் குடிசை வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. அதன் பிறகு தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.