குடிசை வீடு தீயில் எரிந்து நாசம்
குடிசை வீடு தீயில் எரிந்து நாசம்
கொள்ளிடம் அருகே புதுப்பட்டினம் ஊராட்சி தற்காஸ் கிராமத்தை சேர்ந்்தவர் ரவிச்சந்திரன். இவரது குடிசை வீடு நேற்று மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் வீட்டில் இருந்த அத்தியாவசிய பொருட்கள் எரிந்து சாம்பலாகின. இதுகுறித்து புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். தகவல் அறிந்த பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் தற்காஸ் கிராமத்துக்கு நேரில் வந்து தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கினார். அப்போது சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர் பவளச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் மருதுபாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் உடன் இருந்தனர்.