குடிநீர் திட்ட பணிகளை தடுத்து நிறுத்திய கவுன்சிலர்கள்மேல்பட்டாம்பாக்கத்தில் பரபரப்பு


குடிநீர் திட்ட பணிகளை தடுத்து நிறுத்திய கவுன்சிலர்கள்மேல்பட்டாம்பாக்கத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 29 March 2023 12:15 AM IST (Updated: 29 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மேல்பட்டாம்பாக்கத்தில் குடிநீர் திட்ட பணிகளை தடுத்து நிறுத்திய கவுன்சிலர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்


மேல்பட்டாம்பாக்கம்,

மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் குடிநீர் திட்ட பணிகளுக்காக ரூ.3.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நேற்று முன்தினம் பணிகள் தொடங்கப்பட்டது. இதற்காக மேல்பட்டாம்பாக்கம் அப்துல்கலாம் நகர் பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் குடிநீர் திட்ட பணிகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த கவுன்சிலர்கள் முகமது இத்ரீஸ், முத்துகிருஷ்ணன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் முஜிபுர் ரகுமான், நவாப் உள்ளிட்டோர் திரண்டு வந்து குடிநீர் திட்ட பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்து வந்த பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயமூர்த்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கவுன்சிலர்கள், பேரூராட்சி பகுதியில் கழிவுநீர் செல்வதற்கு வடிகால் வாய்க்கால் சரியான முறையில் இல்லை. வறட்டு குட்டையில் தேங்கி உள்ள கழிவுநீரால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர் என கூறினர். அதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் போலீசார், குடிநீர் திட்ட பணிகள் மூலம் பேரூராட்சி முழுவதும் மக்கள் பெருமளவில் பயனடைய உள்ளனர். மேலும் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட கவுன்சிலர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story