சாலையை கடக்க முயன்ற தம்பதி, ஆட்டோ மோதி பலி
சாலையை கடக்க முயன்றபோது ஆட்டோ மோதி கணவன்-மனைவி பரிதாபமாக இறந்தனர்.
ராமேசுவரம்
சாலையை கடக்க முயன்றபோது ஆட்டோ மோதி கணவன்-மனைவி பரிதாபமாக இறந்தனர்.
ஆட்டோ மோதியது
ராமேசுவரம் வேர்க்கோடு பகுதியை சேர்ந்தவர் சேவியர் (வயது 70). இவருடைய மனைவி பரிபூரணம்(65). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் தங்கச்சிமடத்தில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்று விட்டு ராமேசுவரம் செல்ல பஸ் ஏறுவதற்காக தங்கச்சிமடம் வலசை பஸ் நிறுத்தம் எதிரே சாலையை கடக்க முயன்றனர். அப்போது பாம்பனில் இருந்து ராமேசுவரம் நோக்கி வந்த ஆட்டோ, இவர்கள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பரிபூரணம் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த சேவியர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.
டிரைவர் கைது
இந்த விபத்து குறித்து தங்கச்சிமடம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவரான சர்மாநிம்சனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் தம்பதி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.