மின்னல் தாக்கி மாடு செத்தது


மின்னல் தாக்கி மாடு செத்தது
x

ஏரியூர் அருகே மின்னல் தாக்கி மாடு செத்தது.

தர்மபுரி

ஏரியூர்:

ஏரியூர் அருகே உள்ள பட்டக்காரன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் மாதேஷ். விவசாயி. இவர் ஒரு மாடு வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ஏரியூர் பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது திடீரென மாதேசின் மாட்டின் மீது மின்னல் தாக்கியது. இதில் மாடு சம்பவ இடத்திலேயே செத்தது. மேலும் அவரது வீட்டில் இருந்த மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஏரியூர் போலீசார் மற்றும் கால்நடை டாக்டர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.


Next Story