சிறுத்தை அட்டகாசம்; மாட்டை அடித்து கொன்றது
சிறுத்தை அட்டகாசம்
ஈரோடு
ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த ஓசூர் கிராமத்தில் உள்ள கல்குவாரி அருகே நேற்று பசு மாடு ஒன்று குடல் சரிந்த நிலையில் இறந்து கிடந்தது. இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் உடனே தாளவாடி வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் அங்கு சென்று இறந்து கிடந்த பசு மாட்டை பார்வையிட்டனர்.
பின்னர் மாட்டின் அருகில் பார்த்தபோது சிறுத்தையின் கால்தடம் பதிவாகியிருந்தது. சிறுத்தை ஒன்று கல்குவாரி அருகில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாட்டை அடித்து கொன்று வனப்பகுதிக்குள் இழுத்து சென்று போட்டுள்ளது தெரிய வந்தது. கல்குவாரி அருகில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story