Normal
மின்சாரம் பாய்ந்து மாடு செத்தது
மின்சாரம் பாய்ந்து மாடு செத்தது.
பெரம்பலூர்
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி(வயது 55). விவசாயியான இவர் 3 கறவை மாடுகளை வளர்த்து வந்தார். அண்ணாநகர் பகுதியில் அரியலூர்-பெரம்பலூர் சாலையில் கீழே மின்சார வயர் பதித்து தெருவிளக்கு அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் குன்னம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்பகுதியில் அதிக மழை பெய்ததால் தெருவிளக்கிற்கான வயரில் மின்சாரம் பாய்ந்த நிலையில் இருந்தது. அப்போது பெரியசாமி வளர்க்கும் மாடுகளில் ஒன்று அந்த வழியாக வந்தபோது, பழுதடைந்த வயர் மூலம் மின்சாரம் மாட்டின் மீது பாய்ந்தது. இதனால் மாடு கத்தும் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள், உடனடியாக சுதாரித்து மின்சாரத்தை துண்டிக்க செய்தனர். இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது மாடு பரிதாபமாக செத்தது தெரியவந்தது.
Related Tags :
Next Story