சூளகிரி அருகேகார் மோதி பசுவின் கால்கள் முறிந்தன


சூளகிரி அருகேகார் மோதி பசுவின் கால்கள் முறிந்தன
x
தினத்தந்தி 25 Sept 2023 1:00 AM IST (Updated: 25 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

சூளகிரி:

சூளகிரி அருகே ஒம்தேபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ். விவசாயி. இவர் நேற்று மாலை தனக்கு சொந்தமான பசு மாட்டினை சூளகிரி பவர்கிரீட் அருகே ஓட்டி சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் பசு மாட்டின் மீது மோதியது. இதில், மாட்டின் கொம்புகள் மற்றும் 2 கால்கள் முறிந்தது. உயிருக்கு போராடிய மாட்டை உடனடியாக மீட்டு டெம்போ வேனில் ஏற்றி சிகிச்சைக்காக கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.


Next Story