கியாஸ் நிரப்ப வந்தபோது வெடித்த சிலிண்டர்


கியாஸ் நிரப்ப வந்தபோது வெடித்த சிலிண்டர்
x

துணிக்கடை குளிர்சாதன எந்திரத்துக்கு கியாஸ் நிரப்ப வந்தபோது சிலிண்டர் வெடித்தது.

திண்டுக்கல்

பழனி ஆர்.எப்.ரோட்டில் தனியார் வணிக வளாகம் உள்ளது. இங்கு வங்கி, துணிக்கடை, நகைக்கடை, ஓட்டல்கள் என பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் எப்போதும் அங்கு மக்கள் கூட்டம் நிரம்பி காணப்படும். இந்நிலையில் வளாகத்தில் உள்ள துணிக்கடையில் குளிர்சாதன எந்திரத்துக்கு கியாஸ் நிரப்புவதற்காக தனியார் நிறுவன ஊழியர்கள் நேற்று வந்தனர்.

பின்னர் ஆர்.எப்.ரோட்டில் நிறுத்தி இருந்த சரக்குவேனில் இருந்து சுமார் 8 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டரை இறக்கி வணிக வளாகம் முன்பு வைத்தனர். அப்போது திடீரென அங்கு வைத்திருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. சத்தம் கேட்டதும் வணிக வளாகத்தில் இருந்த பொதுமக்கள் என்னமோ, ஏதோ என்று ஓடி வந்தனர். அப்போது சிலிண்டர் வெடித்து சிதறி கிடந்தது. நல்ல வேளையாக அருகில் இருந்த யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

இதுகுறித்து தகவலறிந்த பழனி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விசாரணையில் குளிர்சாதன எந்திரத்தில் கியாஸ் நிரப்பக்கூடிய சாதாரண சிலிண்டர், அதிக அழுத்தம் காரணமாக இறக்கி வைத்த போது எதிர்பாராதவிதமாக வெடித்தது தெரியவந்தது. எனினும் பழனியில் பிரபல வணிக வளாகத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

----


Next Story