பாஞ்சரை ஏரியின் மதகை சீரமைக்க வேண்டும்


பாஞ்சரை ஏரியின் மதகை சீரமைக்க வேண்டும்
x

பாஞ்சரை ஏரியின் மதகை சீரமைக்க வேண்டும் என்று தெள்ளார் ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் கமலாட்சி இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அ.ஸ்ரீதர், ந.ராஜன்பாபு, துணைத்தலைவர் விஜயலட்சுமி தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், பாஞ்சரை ஏரி மதகின் கதவு சேதமடைந்து உள்ளதால் அதனை திறக்க முடியவில்லை. இதனால் ஏரி பாதிக்கு மேல் நிரம்பியும் பாசனத்துக்கு நீர் திறக்க முடியாத நிலை உள்ளது. எனவே, மதகை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

கொடியாலம் இருளர் காலனிக்கு சிமெண்டு சாலை மற்றும் கூடலூரில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலைக்கு வராதவர்களை வேலைக்கு வந்ததாக முறைகேடாக வருகை பதிவேட்டில் பதிவிடுவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பின்னர் பேசிய ஒன்றியக்குழு தலைவர் கமலாட்சி இளங்கோவன், உறுப்பினர்களின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story