சேதமடைந்த நடைபாலத்தை அகற்றிவிட்டு புதிதாக கட்ட வேண்டும்


சேதமடைந்த நடைபாலத்தை அகற்றிவிட்டு புதிதாக கட்ட வேண்டும்
x

விழல்கோட்டகத்தில் சேதமடைந்த நடைபாலத்தை அகற்றிவிட்டு புதிதாக கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

விழல்கோட்டகத்தில் சேதமடைந்த நடைபாலத்தை அகற்றிவிட்டு புதிதாக கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடைபாலம்

கூத்தாநல்லூர் அருகே விழல்கோட்டகம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கும், மணல்கொண்டான் கிராமத்திற்கும் இடையே கோரையாற்றின் குறுக்கே 40 ஆண்டுகளுக்கு முன்பு நடைபாலம் கட்டப்பட்டது.

இந்த பாலத்தை விழல்கோட்டகம், வெள்ளக்குடி, பொதக்குடி, கோரையாறு, மணல்கொண்டான், சித்தாம்பூர், வாழச்சேரி, கற்கோவில், கீழாலவந்தசேரி, அதங்குடி, லெட்சுமாங்குடி, மரக்கடை மற்றும் அதனை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

சேதமடைந்து காணப்படுகிறது

இந்த நிலையில் நடைபாலம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்து காணப்படுகிறது. பாலத்தை தாங்கி நிற்கும் முகப்பு பகுதியில் அமைக்கப்பட்ட துண்கள் மற்றும் பாலத்தில் அமைக்கப்பட்ட சில தளங்கள், தடுப்பு கம்பிகள் சேதமடைந்துள்ளன. பழுதடைந்த அந்த பாலம் வழியாக செல்லவே பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து வெள்ளக்குடியை சேர்ந்த கோமதி கூறுகையில், பாலம் கட்டி பல ஆண்டுகள் ஆவதால் அதன் உறுதி தன்மை படிப்படியாக குறைந்து வருகிறது. பாலத்தை கடந்து தான் பல்வேறு பணிகளுக்கான கிராம மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர்.

புதிதாக கட்ட வேண்டும்

பாலத்தில் தடுப்பு கம்பிகள் சேதம் அடைந்துள்ளதால் வயதானவர்கள் செல்லும் போது தடுமாறி ஆற்றுக்குள் விழும் அபாயம் உள்ளது. சிலர் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்துள்ளனர்.எனவே சேதமடைந்த நடைபாலத்தை அகற்றி விட்டு புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என்றார்.

விழல்கோட்டகத்தை சேர்ந்த பள்ளி மாணவி பிரியதர்ஷினி;- இந்த நடைபாலம் 10 ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் உள்ளது. பல்வேறு கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆஸ்பத்திரி, தாசில்தார் அலுவலகம் என போன்ற இடங்களுக்கு இந்த பாலத்தை கடந்து தான் செல்ல வேணடும். எனவே பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு சேதமடைந்த நடைபாலத்தை அகற்றி விட்டு புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என்றார்.


Next Story