சேதமடைந்த பழைய அங்கன்வாடியை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும்


சேதமடைந்த பழைய அங்கன்வாடியை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும்
x
தினத்தந்தி 3 April 2023 12:15 AM IST (Updated: 3 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொய்கைநல்லூரில் சேதமடைந்த பழைய அங்கன்வாடி கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

பொய்கைநல்லூரில் சேதமடைந்த பழைய அங்கன்வாடி கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேதமடைந்த அங்கன்வாடி கட்டிடம்

கூத்தாநல்லூர் அருகே பொய்கைநல்லூரில் அங்கன்வாடி உள்ளது. இந்த அங்கன்வாடி கட்டிடம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இங்கு பொய்கைநல்லூர், சேந்தங்குடி, புத்தகரம் போன்ற பகுதிகளை சேர்ந்த குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக அங்கன்வாடி கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. அங்கன்வாடி கட்டிடத்தின் மேற்கூரையில் காங்கிரீட் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

பெற்றோர் அச்சம்

மேலும் கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்பட்டு உள்ளதால் மழை காலங்களில் தண்ணீர் கசிந்து வருவதால் குழந்தைகள் அவதிப்பட்டு வகின்றனர். கட்டிடம் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதால் அங்கன்வாடிக்கு குழந்தைகளை அனுப்புவதற்கு பெற்றோர் அச்சம் அடைந்து வேறு கட்டிடத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துனர்.

புதிதாக கட்ட வேண்டும்

இதை தொடர்ந்து அங்கன்வாடி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. வாடகை கட்டிடத்தில் குழந்தைகள் கல்வி கற்க போதிய வசதிகள் இல்லை.

இதனால் பழுதடைந்த பழைய அங்கன்வாடி கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story