நாளை மறுநாள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்


நாளை மறுநாள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
x

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் நடக்கிறது.

கரூர்

தனியார் துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள அனைத்து வகை பதிவுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் 2-வது மற்றும் 4-வது வெள்ளிக்கிழமைகளில் கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வாரத்திற்குரிய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. இம்முகாமில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, கணினிப்பயிற்சி மற்றும் பட்டப்படிப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தங்களின் கல்வி சான்றிதழ்கள் மற்றும் சுயவிவர குறிப்புகளுடன் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்றுக் கொள்ளலாம். தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணி காலியிடங்களில் தகுதிவாய்ந்த பதிவுதாரர்களை தேர்வு செய்து கொள்ளலாம். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்குபெற விருப்பமுள்ள வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுவோர் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது. (மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 04324-223555) வேலை தேடும் இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.


Next Story