வெடிபொருட்கள் சப்ளை செய்த வியாபாரி கைது
வெடிபொருட்கள் சப்ளை செய்த வியாபாரி கைது செய்யப்பட்டார்.
நீலகிரி
கூடலூர்,
கூடலூர் தாலுகா நாடுகாணியில் தேவாலா போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது வெடிபொருட்களான டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் வைத்திருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து நாடுகாணியை சேர்ந்த கண்ணன் (வயது 41), ரதீஷ் (35) ஆகிய 2 பேரை கடந்த 30-ந் தேதி போலீசார் கைது செய்தனர். மேலும் வெடிபொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அப்போது கேரள மாநிலம் வழிக்கடவு பகுதியை சேர்ந்த வியாபாரி அப்துல் கபூர் (வயது 51) என்பவர் வெடிபொருட்களை சப்ளை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து தேவாலா போலீசார் அப்துல் கபூரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story