நாகர்கோவிலில் தூக்கில் தொங்கிய பெண் சாவில் சந்தேகம்; தாயார் போலீசில் பரபரப்பு புகார்


நாகர்கோவிலில் தூக்கில் தொங்கிய பெண் சாவில் சந்தேகம்; தாயார் போலீசில் பரபரப்பு புகார்
x

நாகர்கோவிலில் தூக்கில் தொங்கிய பெண் சாவில் சந்தேகம் இருப்பதாக தாயார் போலீசில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் தூக்கில் தொங்கிய பெண் சாவில் சந்தேகம் இருப்பதாக தாயார் போலீசில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

பெண் தற்கொலை

நாகர்கோவில் கோட்டார் கலைநகரை சேர்ந்தவர் சுந்தர் (வயது 45), டெம்போ டிரைவர். இவருடைய மனைவி விமலா ராணி (40). இவர் மூச்சு திணறல் மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாக தெரிகிறது. இதற்காக பல இடங்களில் சிகிச்சை மேற்கொண்டும் பலனில்லை. இந்த நிலையில் விமலா ராணி நேற்றுமுன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த கோட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விமலா ராணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சுந்தர் கொடுத்த புகாரின் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாவில் சந்தேகம்

இதற்கிடையே விமலா ராணியின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது தாயார் லீலா மற்றும் உறவினர்கள் கோட்டார் போலீஸ் நிலையத்தில் நேற்று திரண்டனர். அப்போது லீலா போலீசாரிடம், தனது மகள் விமலா ராணி தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பே இல்லை. எனது மகள் சாவில் ஏதே மர்மம் உள்ளது. இதுகுறித்து போலீசார் சுந்தரிடமும், அவரது உறவினர்களிடமும் முறையான விசாரணை நடத்த வேண்டும் என கூறினார்.

அதற்கு பதில் அளித்த போலீசார், விமலா ராணியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் தற்கொலையா? அல்லது கொலையா? என்பது தெரியவரும். மேலும் அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்பது மட்டும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது என கூறினர். இதனை தொடர்ந்து லீலா மற்றும் அவரது உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே சென்றனர். இந்த சம்பவத்தால் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story