இறந்து கிடந்தவர் அடையாளம் தெரிந்தது
மேட்டுப்பாளையம் பாலாற்று பகுதியில் இறந்து கிடந்தவர் அடையாளம் தெரிந்தது
திருப்பத்தூர்
வாணியம்பாடியை அடுத்த மேட்டுப்பாளையம் பாலாற்று பகுதியில் உள்ள குட்டையில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் நேற்று முன்தினம் மர்மமான முறையில் முகம் சிதைந்த நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் அவர் வாணியம்பாடி சென்னாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (வயது 48) என்பதும், பெயிண்டர் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து, உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story