திருப்பூரில் வாலிபரை கொன்று அவருடைய உடலை கொலையாளிகள் எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூரில் வாலிபரை கொன்று அவருடைய உடலை கொலையாளிகள் எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அனுப்பர்பாளையம்,
திருப்பூரில் வாலிபரை கொன்று அவருடைய உடலை கொலையாளிகள் எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கருகிய நிலையில் வாலிபர் உடல்
திருப்பூர் திருமுருகன்பூண்டியை அடுத்த பொங்குபாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கருகிய நிலையில் உடல் ஒன்று கிடப்பதாக 15 வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன், துணை கமிஷனர் அபினவ்குமார், கொங்குநகர் சரக போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார், இன்ஸ்பெக்டர்கள் தாமோதரன், ராஜேஸ்வரி, ஜெகநாதன், பிரேமா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த உடலை பார்வையிட்டனர். அப்போது எரிந்து கிடந்தவருக்்கு 25 வயது இருக்கலாம் என்றும், உடல் முழுவதும் எரிந்து விட்டதால் அவர் யார்? என்று அடையாளம் காண முடியவில்லை. மேலும் உடல் அருகே நைலான் கயிறு மற்றும் சாக்குப்பை கிடந்தது.
இதையடுத்து தடய அறிவியல் துறை அதிகாரி விஜயகுமார் உள்ளிட்டோர் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்ப நாய் ஹண்டர் வரவழைக்கப்பட்டது. அந்த நாய், மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.பின்னர் அந்த உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
கொலையாளிகள், கொலை செய்யப்பட்ட வாலிபரை வேறு பகுதியில் இருந்து கடத்தி வந்து அவரை இங்கு ெகான்று உடலை எரித்தனரா? அல்லது உயிரோடு எரித்து கொன்றனரா? அல்லது வேறு பகுதியில் கொன்று உடலை இங்கு கொண்டு வந்து எரித்தனரா? என்று கண்டு பிடிக்க அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் நேற்று முன்தினம் இரவு மர்ம ஆசாமி ஒருவர் அந்த பகுதிக்கு மொபட்டில் ஒரு மூட்டையை கொண்டு வருவது போல் பதிவாகி உள்ளது. பின்னர் 3 நிமிடம் கழித்து அதே நபர் வந்த வழியாக மொபட்டில் செல்வதும் தெரிய வந்துள்ளது. எனவே வாலிபரை கொலை செய்து, சாக்குப்பையில் மூட்டை கட்டி கொண்டு வந்து, சம்பவ இடத்தில் போட்டு எரித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அந்த பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் அதிகமாக வசிப்பதால் மோதல் காரணமாக கும்பலாக சேர்ந்து கொலை செய்திருப்பார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக கொலையானவர் யார்? என்பதை அடையாளம் தெரிவதில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் காணாமல் போனவர்கள் பற்றிய விபரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர். இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் அருகே கருகிய நிலையில் வாலிபர் உடல் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-----------------