மானை நாய்கள் கடித்து குதறியது
வேதாரண்யம் அருகே நாய்கள் கடித்து குதறிய மானை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து காட்டில் விட்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் நாய்கள் கடித்து குதறிய மானை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து காட்டில் விட்டனர்.
வனவிலங்கு சரணாலயம்
வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் வனவிலங்கு சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்தில் மான், முயல், காட்டுப்பன்றி, குரங்குகள் உள்ளிட்ட விலங்குகள் உள்ளன.
தண்ணீர் தேடி காட்டில் இருந்து மான்கள் அடிக்கடி வெளியேறி கிராம பகுதிகளுக்கு சென்று விடுகின்றன.
மானை கடித்து குதறிய நாய்கள்
இந்த நிலையில் நேற்று காலை சரணாலயத்தில் இருந்து தண்ணீர் தேடி 2 வயது புள்ளிமான் ஒன்று வெளியேறி நாலுவேதபதி கடற்கரை பகுதியில் சுற்றித்திரிந்தது.
இதை பார்த்த நாய்கள் அந்த மனை கடித்து குதறின. அப்போது அந்த வழியாக சென்ற நாலுவேதபதியை சேர்ந்த பிரபுகுமார் என்பவர் நாய்களிடம் இருந்து அந்த மானை மீட்டார்.
வனத்துறையினர் காட்டில் விட்டனர்
இதுகுறித்து கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கானுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் வனவர் பெரியசாமி, வனக்காவலர் நாகூரான், வேட்டை தடுப்பு காவலர்கள் நிர்மல்ராஜ், வேதமூர்த்தி, நவநீதகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மானை மீட்டு சென்றனர்.
நாய்கள் கடித்ததால் காயம் அடைந்த மானுக்கு கோடியக்கரை உதவி கால்நடை டாக்டரிடம் சிகிச்சை அளித்து காட்டில் விட்டனர்.