புறப்படும்-சேருமிடம் பலகையில் தமிழிலும் எழுத வேண்டும்
மயிலாடுதுறை-மைசூரு விரைவு ரெயிலில் புறப்படும்-சேருமிடம் பலகையில் தமிழிலும் எழுத வேண்டும் என ரெயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை-மைசூரு விரைவு ரெயிலில் புறப்படும்-சேருமிடம் பலகையில் தமிழிலும் எழுத வேண்டும் என ரெயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மைசூரு விரைவு ரெயில்
மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, கரூர், ஈரோடு, சேலம், ஒசூர், பெங்களூரு வழியாக மைசூருக்கு தினசரி விரைவு ெரயில் இயக்கப்படுகிறது. இந்த விரைவு ெரயில் மயிலாடுதுறையில் இருந்து தினசரி மாலை 5.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கு மைசூருக்கு சென்றடைகிறது.
தமிழ் மொழி புறக்கணிப்பு
அதேபோல மைசூரில் இருந்து தினசரி மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு மயிலாடுதுறைக்கு வந்தடைகிறது. முக்கிய தொழில் மற்றும் கோவில் நகரங்களை கடந்து செல்லும் இந்த மயிலாடுதுறை - மைசூரு விரைவு ரெயிலின் பயண தூரம் 80 சதவீதம் தமிழகத்தில் தான் அமைந்துள்ளது.
இந்த ரெயிலில் தமிழ் பேசுபவர்கள்தான் அதிகளவில் பயணம் மேற்கொள்கின்றனர். தமிழகத்தின் நகரங்களையும், பெங்களூரு, மைசூரு போன்ற கர்நாடக மாநிலத்தின் நகரங்களையும் இணைக்கும் முக்கிய ரெயிலின் விளம்பர பலகையில் தமிழ் மொழி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளில் மட்டுமே புறப்படுமிடம்- சேருமிடம் பலகையில் இடம் பெற்றுள்ளது.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதுகுறித்து மயிலாடுதுறை ெரயில் பயணிகள் சங்கத்தைச் சேர்ந்த சுந்தர் என்பவர் கூறுகையில், மயிலாடுதுறை-மைசூரு விரைவு ெரயிலில் உள்ள புறப்படுமிடம்- சேருமிடம் பலகையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது ெரயில்வே விதிகளுக்குப் புறம்பானது ஆகும். உடனடியாக ெரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, புறப்படுமிடம்-சேருமிடம் பலகையில் தமிழிலும் எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல ஒவ்வொரு பெட்டியிலும் உள்ள அந்த பலகைகளில் சம எண்ணிக்கையில் தமிழில் எழுதப்படுவதை உறுதி செய்ய வேண்டும். தமிழ், கன்னடம், இந்தி, ஆங்கிலம் என்ற வரிசையில் முறையாக எழுதிட வேண்டும். இதுகுறித்து ெரயில்வே துறை உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.