திசையன்விளை பேரூராட்சி துணை தலைவரை நீக்க வேண்டும்; கவுன்சிலர்கள் மனு
திசையன்விளை பேரூராட்சி துணை தலைவரை நீக்க வேண்டும் என இயக்குனரிடம் கவுன்சிலர்கள் மனு கொடுத்தனர்.
திருநெல்வேலி
திசையன்விளை பேரூராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் ஆறுமுகத்தேவி, தி.மு.க. கவுன்சிலர் நடேஷ் அரவிந்த் ஆகியோர் நேற்று பாளையங்கோட்டையில் உள்ள பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் திசையன்விளை பேரூராட்சி துணை தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறி 10 கவுன்சிலர்கள் கையெழுத்து போட்டு இருந்த கடிதத்தை உதவி இயக்குனரிடம் வழங்கினார்கள்.
இதேபோல் நாங்குநேரி பேரூராட்சியில் பணம் கையாடல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கவுன்சிலர்கள் சித்ரா, முத்துப்பாண்டியன் ஆகியோர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story