மாநகராட்சி கூட்டத்தில் கண்ணீர் விட்டு அழுத துணை மேயர்


மாநகராட்சி கூட்டத்தில் கண்ணீர் விட்டு அழுத துணை மேயர்
x

மாநகராட்சி கூட்டத்தில் கண்ணீர் விட்டு அழுத துணை மேயர்.

கும்பகோணம்,

கும்பகோணம் மாநகராட்சி கூட்டம் மேயர் சரவணன்(காங்கிரஸ்) தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசும்போது, தான் மாநகராட்சி மேயராக பதவியில் இருக்கும்போது துணை மேயராக பொறுப்பு வகிக்கும் சு.ப.தமிழழகனை மாநகராட்சியின் செயல் தலைவர் என குறிப்பிட்டு மாநகராட்சி பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருப்பதால் தனது பதவிக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் பதில் அளிக்க வேண்டும் என்றார். இதைத்தொடர்ந்து துணை மேயர் சு.ப.தமிழழகன் பேசினார். அப்போது அவர், நான் தி.மு.க.வுக்கும் கட்சி தலைவருக்கும் விசுவாசமாக இருந்து வருகிறேன்.

கும்பகோணம் மேயர் பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டபோது நான் சென்னைக்கு சென்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தேன். அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னிடம் மேயர் பதவி உனக்கு கிடைக்காததில் வருத்தம் இல்லையே தமிழ் என என்னிடம் கேட்டார். அந்த வார்த்தை ஒன்றே எனக்கு ஆறுதலாக இருந்து வருகிறது. எனக்கு அது ஒன்றே போதும் என கூறி கண்ணீர் விட்டு அழுதார். இதனால் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். துணை மேயா் அழுததால் மாநகராட்சி கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story