வளர்ச்சிப்பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும்


வளர்ச்சிப்பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும்
x

ஊரக வளர்ச்சித்துறை சார்பில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.

திருப்பத்தூர்

ஆய்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பிரதம மந்திரி வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வீடுகளின் கட்டுமான பணிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள், நமக்கு நாமே திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது கலெக்டர் பேசுகையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் நூலக புனரமைப்பு பணிகள், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கும் பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையக்கட்டிடம் கட்டுமான பணிகள், சிமெண்டு சாலை அமைக்கும் பணிகள், தடுப்பணைகள், கழிவுநீர் கால்வாய்கள், சிறு பாலங்கள், பள்ளி சுற்றுச்சுவர், ஊராட்சி மன்ற கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

குறிப்பிட்ட காலத்திற்குள்...

6 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வருகிற அனைத்து வளர்ச்சித் திட்டப்பணிகளை துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும். மேலும் நிலுவையில் உள்ள அனைத்து வளர்ச்சித்திட்டப்பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் சுந்தரபாண்டியன், ஊராட்சி உதவி இயக்குனர் (தணிக்கை) பிச்சாண்டி, உதவி திட்ட அலுவலர் செல்வன், உதவி செயற்பொறியாளர்கள் மகேஷ்குமார், பழனிசாமி, அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.


Next Story