தர்ணா போராட்டம் நடத்தியவர்களால் பரபரப்பு


தர்ணா போராட்டம் நடத்தியவர்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 July 2022 10:59 PM IST (Updated: 8 July 2022 11:00 PM IST)
t-max-icont-min-icon

கோவிலை திறப்பதில் ஏற்பட்ட பிரச்சினையால் தர்ணா போராட்டம் நடத்தியவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அடுத்த மோட்டூர் காலனியில் உள்ள மாரியம்மன் கோவிலை நிர்வகிப்பதில் இரு தரப்பினருக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் கோவில் திறக்கப்படாமல் பூட்டியே இருந்தது. இதற்கிடையே கோவிலை திறந்து வழிபாடு நடத்த வேண்டும் என்று நாகராஜ் தரப்பினர் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். அதன்பேரில் உதவி கலெக்டர் சதீஷ்குமார் தலைமையில் கடந்த வாரம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி நேற்று காலை கோ0விலை திறக்க வேண்டும் என்று முடிவு செய்து இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர்.

ஆனால் நேற்று கோவில் திறக்கப்படாததால் ஆத்திரம் அடைந்த நாகராஜ் தரப்பினர் கோவில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த உதவி கலெக்டர் மீண்டும் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி இறுதி முடிவெடுக்கலாம் என்று தகவல் தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Next Story