பாழடைந்த பள்ளி கட்டிடத்தை இடிக்க வேண்டும்


பாழடைந்த பள்ளி கட்டிடத்தை இடிக்க வேண்டும்
x

வாலாஜாவில் பாழடைந்த பள்ளி கட்டிடத்தை இடிக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை

வாலாஜா நகராட்சி மார்க்கெட் நடுநிலைப்பள்ளி நுழைவு வாயிலிலேயே பழைய வகுப்பறைகள் கட்டிடங்கள் பாழடைந்த நிலையில் உள்ளன. இந்த கட்டிடங்களை இடித்து அகற்றுவதற்கு பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் பலமுறை கோரிக்கைகளை வைத்துள்ளனர். ஆனாலும் இதுவரை இடிக்கப்படவில்லை. எந்த நேரத்திலும் இந்த கட்டிடங்கள் சரிந்து விழப்போகும் அபாயத்துடன் காணப்படுகின்றன. அந்த வகுப்பறை வளாக பகுதியிலேயே சிறுவர், சிறுமியர் விளையாடுகின்றனர். எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தால் உயிர்ச்சோதம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே உடனடியாக இந்த வகுப்பறை கட்டிடங்களை இடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story