சிவகளையில் நடந்த தி.மு.க. கூட்டத்தில் பயனாளிகளுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்


சிவகளையில் நடந்த தி.மு.க. கூட்டத்தில் பயனாளிகளுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
x

சிவகளையில் நடந்த தி.மு.க. கூட்டத்தில் பயனாளிகளுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் மத்திய ஒன்றிய தி.மு.க. சார்பில் சிவகளையில் தமிழக அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மத்திய ஒன்றிய செயலாளர் பி.ஜி.ரவி தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் கலீல் ரஹ்மான், சாயர்புரம் பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி, யூனியன் கவுன்சிலர் ராமலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய துணைச் செயலாளர் கிருஷ்ணன் வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர் பசும்பொன் ரவிச்சந்திரன் சிறப்புரையாற்றினார்.

மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஏழை, எளியவர்களுக்கு தையல் எந்திரம், சேலை உள்பட நலத்திட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் மாநில மாணவரணி துணை செயலாளர் உமரி சங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், துணைச் செயலாளர் வக்கீல் ஆறுமுகபெருமாள், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று ஸ்ரீவைகுண்டம் பேரூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் கொம்பையா தலைமை தாங்கினார்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். தலைமை கழக பேச்சாளர் பசும்பொன் ரவிச்சந்திரன், மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் பேசினர். தலைமை செயற்குழு உறுப்பினர் பிரம்மசக்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

-------------


Next Story