வலையில் சிக்காமல் தப்பி ஓடிய நாய்கள்


வலையில் சிக்காமல் தப்பி ஓடிய நாய்கள்
x

வேலூரில் நாய்கள் பிடிக்க முயன்றபோது வலையில் சிக்காமல் நாய்கள் தப்பி ஓடின.

வேலூர்

வேலூரில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் நாய்களுக்கு கருத்தடை செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக ஊழியர்கள் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து வாகனங்களில் ஏற்றி கொண்டு செல்கின்றனர்.

இந்த நிலையில், சத்துவாச்சாரி பிராமணர் தெரு, வெள்ளாளர் தெரு, மந்தைவெளி, நேதாஜி நகர், கணபதி நகர் பகுதிகளில் தெருவில் சுற்றும் நாய்களை பிடிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

ஊழியர்களை பார்த்த நாய்கள் தலைதெறிக்க ஓடி மறைந்து கொண்டன. ஒரு தெருவில் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் இருந்த நிலையில் ஒரு சில நாய்கள் மட்டுமே பிடிபட்டன.

நாய்களை பிடிக்க ஊழியர்கள் முயன்றபோது, அவை லாவகமாக தப்பி சென்றதால் ஊழியர்கள் தவறி விழுந்தனர்.

இதனை பார்த்த பொதுமக்கள் நாய்களை பிடிக்க ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று ஆதங்க பட்டனர். மேலும் தப்பி ஓடிய நாய்களையும் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story