விவசாயி வீட்டின் கதவை உடைத்து ரூ.2½ லட்சம் நகை, பணம் திருட்டு
தானிப்பாடி அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து ரூ.2½ லட்சம் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தண்டராம்பட்டு
தானிப்பாடி அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து ரூ.2½ லட்சம் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நகை, பணம் திருட்டு
தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி அருகே போந்தை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 85), விவசாயி. இவருக்கு 5 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.
ஏழுமலை தனது மனைவியுடன் போந்தை கிராமத்திலேயே வசித்து வருகிறார்.
கடந்த 24-ந் தேதி திருவண்ணாமலையில் உள்ள மகள் வீட்டிற்கு ஏழுமலை மனைவியுடன் சென்றார். இன்று வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பார்த்த போது வீட்டுக்குள் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்து ரூ.85 ஆயிரம் மற்றும் 5 பவுன் நகை ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.
திருட்டு போன நகை மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.2½ லட்சம் ஆகும்
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இதுகுறித்து ஏழுமலை தானிப்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.