தூர்வாரும் பணிகள் வருகிற 31-ந் தேதிக்குள் முடிக்கப்படும்


தூர்வாரும் பணிகள் வருகிற 31-ந் தேதிக்குள் முடிக்கப்படும்
x
தினத்தந்தி 7 May 2023 12:15 AM IST (Updated: 7 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் வருகிற 31-ந் தேதிக்குள் முடிக்கப்படும் என்று கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

திருவாரூர்

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் வருகிற 31-ந் தேதிக்குள் முடிக்கப்படும் என்று கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

தூர் வாரும் பணிகள்

திருவாரூர் மாவட்டத்தில் தூர் வாரும் பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கி தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று திருவாரூர் மாவட்டம் கல்லிக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கானூர், சித்தாநல்லூர், கிடாரம்கொண்டான் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் தூர வாரும் பணிகளை திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அதிகாரிகளிடம் தூர்வாரும் பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார். மேலும் அவர் அங்கிருந்த பொதுமக்கள், விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- திருவாரூர் மாவட்டத்தில் நீர்வளத் துறை மூலமாக 111 பணிகள் 1000 கிலோமீட்டர் தூரத்திற்கு தூர் வாரமுடிவு செய்யப்பட்டுள்ளது.

பணிகளில் தொய்வு

இதில் 40 பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகளும் அடுத்த வாரத்திற்குள் தொடங்கப்பட்டு மேட்டூர் அணை திறப்பதற்குள் மற்ற அனைத்து பணிகளும் நிறைவு பெறும். ரூ.12 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் பணிகளை ஜூன் 10-ம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் வருகிற 31- தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மழையின் காரணமாக கடந்த சில நாட்களாக பணிகளில் தொய்வு ஏற்பட்ட நிலையில் அடுத்த சில நாட்களில் இரண்டு மடங்கு வேலை செய்து பணிகள் விரைவுப்படுத்தப்படும்.

600 கிலோ மீட்டர் தூரத்திலான சி மற்றும் டி வாய்க்கால் 100 நாள் வேலை திட்டம் மூலமாக தூர் வாருவதற்கு பணிகள் தொடங்கப்ப்ட்டுள்ளன. அந்த பணிகளும் மே 31- ந் தேதிக்குள் நிறைவு பெறும் என்றார். ஆய்வின் போது, வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, தாசில்தார் நக்கீரன், என்ஜினீயர் ராஜேந்திரன், வெண்ணாறு வடி உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன், உதவி பொறியாளர் பிருந்தா தேவி கீழ்வேளூர் பாசனபிரிவு உள்ளிட்ட பலர் அருகில் இருந்தனர்.


Next Story