குடிநீர் கிணற்றை பராமரிக்க வேண்டும்


குடிநீர் கிணற்றை பராமரிக்க வேண்டும்
x

குடிநீர் கிணற்றை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை


சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பிலாஞ்சி 5-வது வார்டு பகுதியில் 1956-1957-ம் ஆண்டு குடிநீர் கிணறு அமைக்கப்பட்டது. அந்தக் குடிநீர் கிணறு 35 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கி வந்தது. தற்போது அந்தக் குடிநீர் கிணற்றில் குப்பைகளை கொட்டி அசுத்தம் செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் கிணற்றில் உள்ள குப்பைகளை அகற்றி, அதன் மீது கம்பி வலை போட்டு பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story