ரூ.1¾ லட்சத்துடன் டிரைவர் தலைமறைவு


ரூ.1¾ லட்சத்துடன் டிரைவர் தலைமறைவு
x
தினத்தந்தி 18 Dec 2022 12:15 AM IST (Updated: 18 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ரூ.1¾ லட்சத்துடன் டிரைவர் தலைமறைவு போலீஸ் வலைவீச்சு

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்

கள்ளக்குறிச்சி அருகே மாடூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மனைவி வசந்தி(வயது 48). இவர் அதே பகுதியில் கியாஸ் ஏஜென்சி நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே மணக்குப்பம் கிராமத்தை சேர்ந்த அன்புமாறன் மகன் தமிழ்ச்செல்வன்(33) என்பவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் தமிழ்செல்வன் வேலையில் சேர்ந்த போது முன்பணமாக ரூ.75 ஆயிரம் பெற்றுக் கொண்டார். மேலும் கியாஸ் சிலிண்டர் விற்ற ரூ.1 லட்சத்து ஆயிரத்தி 500 என மொத்தம் ரூ.1 லட்சத்து 76 ஆயிரத்து 500ஐ கியாஸ் ஏஜென்சி நிறுவனத்துக்கு செலுத்தாமல் திடீரென தலைமறைவாகி விட்டார். இது குறித்து சண்முகசுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் தமிழ்ச்செல்வன் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story