பிரசவத்தின்போது உடன் இல்லை என்று கூறி மனைவி பேச மறுத்ததால் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை


பிரசவத்தின்போது உடன் இல்லை என்று கூறி மனைவி பேச மறுத்ததால் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
x

திருக்கோவிலூர் அருகே பிரசவத்தின்போது உடன் இல்லை என்று கூறி மனைவி பேச மறுத்ததால் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்,

திருக்கோவிலூர் அடுத்த கனகனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் மகன் ஆனந்த் (வயது 26) லாரி டிரைவர். இவருக்கும், மணலூர்பேட்டையை சேர்ந்த சரளா என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் சரளாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்து, அவருடைய பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று தனது மனைவியை பார்ப்பதற்காக ஆனந்த் மணலூர்பேட்டை சென்றார்.

அப்போது பிரசவத்தின் போது கணவர் தன்னுடன் இல்லை என்று கூறி, சரளா ஆனந்துடன் பேசவில்லை என தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஆனந்த், கனகனந்தலில் தனது வயலில் வைத்து விஷத்தை குடித்து விட்டார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஆனந்த் பரிதாபமாக உயரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story