மதுபோதையில் பால் லாரியை ஓட்டிய டிரைவர்


மதுபோதையில் பால் லாரியை ஓட்டிய டிரைவர்
x

மதுபோதையில் பால் லாரியை ஓட்டிய டிரைவருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

மதுரை

மதுபோதையில் பால் லாரியை ஓட்டிய டிரைவருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

அதிவேகமாக சென்ற லாரி

மதுரை காளவாசல் பகுதியில் பால் லாரி ஒன்று அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. இதை கவனித்த போக்குவரத்து பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாஜூஸ் வாகனத்தை நிறுத்த சொல்லி உள்ளார். ஆனால், வாகனம் நிற்கவில்லை. உடனடியாக வயர்லெஸ் மூலமாக ரோந்து பணியில் இருந்த போக்குவரத்து காவலர்களுக்கு அந்த தகவலை தெரிவித்தார்.

இதையடுத்து சுதாரித்துக் கொண்ட போலீசார் பைபாஸ் சாலையில் அந்த லாரியை தடுத்த நிறுத்த முயன்றனர். அப்போதும் அந்த லாரி நிற்கவில்லை. அந்த பகுதியில் உள்ள மேம்பாலத்தில் வந்தபோது, லாரியை துரத்தி பிடித்து போலீசார் மடக்கினர்.

அபராதம்

லாரியை உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த முத்தையா என்பவர் ஓட்டி வந்ததும், அவர் அதிக அளவு மது போதையில் இருந்ததும் தெரியவந்தது. மேலும், இவர் ஆவின் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பால் லாரியை இயக்கி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து லாரியை சிறைபிடித்த அதிகாரிகள், லாரி டிரைவருக்கு அபராதம் விதித்ததுடன் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரை செய்தனர். மதுபோதையில் லாரியை இயக்கிய டிரைவரை சினிமா பாணியில் மடக்கி பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story