ஆட்டோவில் தவறிவிட்ட பணம், செல்போனை ஒப்படைத்த டிரைவர்


ஆட்டோவில் தவறிவிட்ட பணம், செல்போனை ஒப்படைத்த டிரைவர்
x

குடியாத்தத்தில் ஆட்டோவில் தவறிவிட்ட பணம், செல்போனை டிரைவர் போலீசில் ஒப்படைத்தார்.

வேலூர்

குடியாத்தம் உள்ள கள்ளூர் ஜெமினி நகரை சேர்ந்தவர் ஜெயவேலு. ஆட்டோ டிரைவர். நேற்று மதியம் இவரது ஆட்டோவில் குடியாத்தம் புதிய பஸ்நிலையத்தில் இருந்து பிச்சனூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பயணம் செய்து குடியாத்தம் பலமநேர்ரோடு அரசமரம் அருகே இறங்கியுள்ளார். அவர் இறங்கி சென்ற பிறகு சிறிது நேரம் கழித்து பார்த்தபோது ஆட்டோவில் செல்போன் மற்றும் அந்த பெண்ணின் மணிப்பர்ஸ் இருந்துள்ளது. உடனடியாக அக்கம் பக்கத்தில் தேடியும் அந்தப் பெண் குறித்து தகவல் தெரியாததால் உடனடியாக ஆட்டோவில் கிடந்த பர்ஸ் மற்றும் செல்போனை குடியாத்தம் டவுன் போலீசில் ஒப்படைத்தார்.

இதனைத் தொடர்ந்து போலீசார் செல்போனில் இருந்த நம்பர் மூலம் ஆட்டோவில் பணம், செல்போனை தவறிவிட்ட பிச்சனூர் பகுதியைச் சேர்ந்த லாவண்யா என்பவரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து ஆட்டோவில் தவறவிட்ட ரூ.3,400 மற்றும் செல்போனை ஒப்படைத்தனர். பணம் மற்றும் செல்போனை ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் ஜெயவேலுவை இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் உள்ளிட்டோர் பாராட்டினார்கள்.


Next Story