போதைபொருள் கடத்தல் கார் கவிழ்ந்த விபத்தில் காயம் அடைந்த டிரைவர் சாவு


போதைபொருள் கடத்தல் கார் கவிழ்ந்த விபத்தில் காயம் அடைந்த டிரைவர் சாவு
x

போதை பொருள் கடத்தல் கார் கவிழ்ந்த விபத்தில் ாயம் அடைந்த டிரைவர் பலியானார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

போதை பொருள் கடத்தல் கார் கவிழ்ந்த விபத்தில் ாயம் அடைந்த டிரைவர் பலியானார்.

குஜராத் மாநிலம் ஜாதியா பகுதியைச் சேர்ந்தவர் பாரபாத்பாய். இவரது மகன் மேலேபாய் (வயது 25). கார் டிரைவர் இவர் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த சரண் சிங் என்பவருடன் காரில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் ஏற்றிய காரை பெங்களூருவில் இருந்து சென்னைக்கு ஓட்டி வந்து கொண்டிருந்தார்.

நாட்டறம்பள்ளி அருேக திருப்பத்தூர் மாவட்ட எல்லை பகுதியில் லட்சுமிபுரம் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

இதனால் டிரைவர் மேலேபாய் உள்பட 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காரை சோதனை செய்ததில் அதில் 15 மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனிடையே படுகாயம் அடைந்த இருவரும் முதலுதவி சிகிச்சைக்கு பின் கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். இந்நிலையில் கார் டிரைவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறற்து விட்டார்.


Next Story