கடத்தப்பட்ட டெம்போவில் ரூ.5 லட்சம் இருந்ததாக நாடகமாடிய டிரைவர்


கடத்தப்பட்ட டெம்போவில் ரூ.5 லட்சம் இருந்ததாக நாடகமாடிய டிரைவர்
x

கடத்தப்பட்ட டெம்போவில் ரூ.5 லட்சம் இருந்ததாக நாடகமாடிய டிரைவர்

கன்னியாகுமரி

கருங்கல்:

கருங்கல் அருகே உள்ள வட்டக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஒருவர் கருங்கலில் வாழைக்குலை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு, திருவனந்தபுரம் சந்தையில் வாழைக்குலை வியாபாரம் செய்யும் ஒருவர் ரூ.10 லட்சம் வரை கொடுக்க வேண்டும் எனக்கூறப்படுகிறது. இந்தநிலையில் திருவனந்தபுரம் வியாபாரி வேறொரு நபரிடம் இருந்து வாழைக்குலைகளை வாங்கி மினி டெம்போவில் ஏற்றி கேரளாவுக்கு அனுப்பி வைத்தார். இதை அறிந்த கருங்கல் வியாபாரி மினி டெம்போவை மடக்கி பிடித்து அதில் இருந்து டிரைவர் இறக்கிவிட்டு வாழைக்குலைகளுடன் டெம்போவை கடத்தி சென்றார்.

இதுகுறித்து டிரைவர் கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் அந்த டெம்போவில் ரூ.5 லட்சம் இருந்ததாகவும் அதனையும் சேர்த்து கருங்கல் வியாபாரி கடத்தி சென்றதாக கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் கருங்கல் வியாபாரியை தொடர்பு கொண்டு பேசினர். உடனே, அவர் மினி டெம்போவை வாழைக்குலைகளுடன் கருங்கல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். ஆனால் டிரைவர் புகாரில் கூறியது போன்று ரூ.5 லட்சம் பணம் இல்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து டிரைவரிடம் போலீசார் விசாரித்த போது தவறுதலாக கூறிவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து நாடகமாடிய டிரைவரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். அத்துடன் டெம்போ உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story