ஆரல்வாய்மொழி அருகே அதிகாரிகள் அதிரடி சோதனை: பாரம் ஏற்றிய 30 லாரிகளை நிறுத்தி விட்டு டிரைவர்கள் தப்பி ஓட்டம் ;ரூ.13½ லட்சம் அபராதம் விதிப்பு


ஆரல்வாய்மொழி அருகே அதிகாரிகள் அதிரடி சோதனை: பாரம் ஏற்றிய 30 லாரிகளை நிறுத்தி விட்டு டிரைவர்கள் தப்பி ஓட்டம் ;ரூ.13½ லட்சம் அபராதம் விதிப்பு
x

அதிகாரிகளின் அதிரடி சோதனையின் போது பாரம் ஏற்றிய 30 லாரிகளை நிறுத்தி விட்டு டிரைவர்கள் தப்பி ஓடினர். ரூ.13½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி,

அதிகாரிகளின் அதிரடி சோதனையின் போது பாரம் ஏற்றிய 30 லாரிகளை நிறுத்தி விட்டு டிரைவர்கள் தப்பி ஓடினர். ரூ.13½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் சோதனை

நெல்லை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து குமரி வழியாக கேரளாவுக்கு கனிமங்கள் ஏற்றி செல்லும் லாரிகள் அதிகரித்து வருகிறது.

போலீசார் நடவடிக்கை எடுத்தும் குறைந்தபாடில்லை. இந்தநிலையில் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடந்த கூட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகளை பிடிக்க வலியுறுத்தப்பட்டது. மேலும் இதற்காக குமரி மாவட்டத்தில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த குழுவில் காவல்துறை, போக்குவரத்து துறை, வருவாய்துறை, கனிமவளத்துறை ஆகியவற்றை சேர்ந்த அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் சட்டத்திற்கு புறம்பாக கனிமங்களை கொண்டு செல்லும் லாரிகளை பிடித்தும், அபராதம் விதித்தும் வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று ஆரல்வாய்மொழி அருகே உள்ள குமாரபுரம் ரோட்டில் 4 வழிச்சாலையை ஒட்டி உள்ள பகுதியில் ஒரு தனியாருக்கு சொந்தமான இடத்தில் குண்டுக்கல் பாரம் ஏற்றிய 30 லாரிகள் நிறுத்தப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு நவீன்குமார், இன்ஸ்பெக்டர் கோபி, தாசில்தார் வினைதீர்த்தான், வட்டார போக்குவரத்து அலுவலர் சசி, போக்குவரத்து ஆய்வாளர் சக்திவேல், மதுரை மண்டல பறக்கும் படை துணை இயக்குனர், ஆகியோர் விரைந்தனர்.

லாரி டிரைவர்கள் ஓட்டம்

அதிகாரிகளை பார்த்ததும் அனைத்து லாரி டிரைவர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். டிரைவர்கள் ஓடியதால் அதிகாரிகளால் ஆவணங்களை சரிபார்க்க முடியவில்லை.

இதனால் அனைத்து லாரிகளுக்கும் மொத்தம் ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story