லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர் கால் துண்டானது


லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர் கால் துண்டானது
x

திருச்சி சஞ்சீவிநகர் அருகே லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் டிரைவரின் கால் துண்டானது.

திருச்சி

திருச்சி சஞ்சீவிநகர் அருகே லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் டிரைவரின் கால் துண்டானது.

சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரி

சேலத்தில் இருந்து செங்கல் லோடு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி திருச்சி வேங்கூருக்கு வந்து கொண்டிருந்தது. இந்த லாரி நேற்று அதிகாலை 5 மணி அளவில் திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் திருச்சி சஞ்சீவிநகர் அருகே வந்தபோது, டீசல் இல்லாததால் சாலையோரம் நிறுத்தப்பட்டது.

அப்போது சென்னையில் இருந்து மதுரைக்கு பெயிண்ட் லோடு ஏற்றி வந்த மற்றொரு லாரி, அங்கு சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரியின் பின்னால் பயங்கரமாக மோதியது. இதில் பின்னால் வந்த லாரியின் முன்பகுதி நொறுங்கியது.

கால் துண்டானது

இந்த விபத்தில் இடிபாடுகளில் பெயிண்ட் லாரி டிரைவரின் கால் சிக்கி கொண்டது. இதனால் அவர் வலியால் அலறிதுடித்தார். இதை கண்ட வாகன ஓட்டிகள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புவீரர்கள் அங்கு சென்று, கருவி மூலம் லாரியின் முன்பகுதியை வெட்டி நீண்ட போராட்டத்துக்கு பிறகு டிரைவரை மீட்டனர்.

கால் துண்டான நிலையில் மீட்கப்பட்ட அவரை திருச்சி அரசு மருத்துவமைனயில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story