கடலூர் கல்வி மாவட்டத்தில்192 ஆசிரியர்களுக்கு ஒரே நாளில் தேர்வு நிலை ஆணை கல்வி அதிகாரி வழங்கினார்


கடலூர் கல்வி மாவட்டத்தில்192 ஆசிரியர்களுக்கு ஒரே நாளில் தேர்வு நிலை ஆணை கல்வி அதிகாரி வழங்கினார்
x

கடலூர் கல்வி மாவட்டத்தில் 192 ஆசிரியர்களுக்கு ஒரே நாளில் தேர்வு நிலை ஆணையை கல்வி அதிகாரி வழங்கினார்.

கடலூர்

கடலூர் கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு 10 ஆண்டுகள் பணி முடித்த பிறகு வழங்கப்படும் தேர்வு நிலை ஆணை வழங்கும் நிகழ்ச்சி கடலூர் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடந்தது.

இதற்கு மாவட்ட கல்வி அலுவலர் சங்கர் தலைமை தாங்கி, 156 பட்டதாரி ஆசிரியர்கள், 23 முதுகலை ஆசிரியர்கள், 12 உடற்கல்வி ஆசிரியர்கள், ஒரு ஓவிய ஆசிரியர் என மொத்தம் 192 ஆசிரியர்களுக்கு நேற்று ஒரே நாளில் தேர்வு நிலை ஆணையை வழங்கினார். வழக்கமாக இந்த தேர்வு நிலை ஆணை ஆசிரியர்களுக்கு கிடைக்க 2 மாதங்களுக்கு மேல் ஆகும்.

192 ஆசிரியர்கள்

ஆனால் தற்போது தமிழகத்தில் முதல் முறையாக மாவட்ட கல்வி அலுவலர், நேர்முக உதவியாளர் கந்தசாமி ஆகியோர் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை கொண்ட குழு அமைத்து, அனைத்து சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டு ஒரே நாளில் 192 ஆசிரியர்களுக்கு ஆணை வழங்கி உள்ளனர்.

14 பேர் சரியான முறையில் ஆவணங்கள் வைக்காததால், அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. ஆணை பெற்ற ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆணை கிடைக்காத ஆசிரியர்கள் உரிய ஆவணங்களை வைத்து தேர்வு நிலை ஆணையை பெற்றுக்கொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story