பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா சொல்வதை தேர்தல் ஆணையம் நிறைவேற்றி வருகிறது


பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா சொல்வதை தேர்தல் ஆணையம் நிறைவேற்றி வருகிறது
x
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா சொல்வதை தேர்தல் ஆணையம் நிறைவேற்றி வருகிறது என முத்தரசன் குற்றம் சாட்டினார்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா சொல்வதை தேர்தல் ஆணையம் நிறைவேற்றி வருகிறது என முத்தரசன் குற்றம் சாட்டினார்.

கட்சி அலுவலகம் திறப்பு

நாகை மாவட்டம் திருமருகல் அருகே நடுக்கடையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலக கட்டிட திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராஜ் எம்.பி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன், மாவட்ட விவசாய சங்க செயலாளர் பாபுஜி, கிளை செயலாளர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் வரவேற்றார். மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் பழனிச்சாமி கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

சாதிவாரி கணக்கெடுப்பு

விழாவில், கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன் கலந்து கொண்டு பேசியதாவது:-

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். இந்தியாவில் 4 ஆயிரத்து 600 சாதிகள் இருக்கின்றன. சாதி விகிதாசார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அதேபோல் விகிதாசார நடைமுறையில் தேர்தல் முறையை கொண்டு வர வேண்டும்.

தேர்தல் ஆணையம் நிறைவேற்றி வருகிறது

இந்திய கம்யூனிஸ்டு கட்சியை மேலும் பலப்படுத்த வேண்டிய அவசியத்தை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருக்கிறது. தற்போது தேர்தல் ஆணையம் பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோர் என்ன சொல்கிறார்களோ அதை நிறைவேற்றுகிற வேலையைத்தான் செய்து வருகிறது.

தமிழக கவர்னர், ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை நிறைவேற்றுகிறார். சமூகத்தில் மாற்றம் ஏற்பட கூடாது என்று நினைக்கிற அமைப்பு தான் ஆர்.எஸ்.எஸ்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட துணை செயலாளர் பாஸ்கரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சரபோஜி, விவசாய சங்க ஒன்றிய தலைவர் மாசிலாமணி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் கிளை துணை செயலாளர் தங்கவேல் நன்றி கூறினார்.


Next Story