மின்கம்பம் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது
வாணியம்பாடியில் மின்கம்பம் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.
திருப்பத்தூர்
வாணியம்பாடி எல்.ஐ.சி அலுவலகம் அருகில் உள்ள மின் கம்பம் திடீரென உயர் மின்னழுத்தம் காரணமாக தீப்பிடித்து எரிந்தது.. சுமார் அரைமணி நேரம் எரிந்த தீ தொடர்பில் உள்ள மின்கம்பிகளில் பற்றி எரிய தொடங்கியது. இதனால் அங்குள்ள வணிக வளாகத்தில் உள்ளவர்கள் பீதியில் அச்சத்துடனும் கதவை அடைத்து கொண்டனர். சாலையில் சென்ற பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
பின்னர் மின்சாரவாரிய ஊழியர்களுக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த மின் ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்து தீயை அணைத்தனர்.
இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story