மின்சார சட்ட திருத்தத்தை ரத்துசெய்ய வேண்டும்


மின்சார சட்ட திருத்தத்தை ரத்துசெய்ய வேண்டும்
x

மின்சார சட்ட திருத்தத்தை ரத்துசெய்ய வேண்டும் என தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

திருப்பத்தூர்

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு கூட்டம் திருப்பத்தூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைவர் தேவராஜ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கங்காதரன் முன்னிலை வகித்தார். விஜயன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைப்பொதுச் செயலாளர் எம்.பாலசுப்பிரமணியம், மாநில துணைத் தலைவர் ரங்கன், சி.ஐ.டி.யு. கன்வினர் கேசவன், பொருளாளர் பத்மநாபன் ஆகியோர் பேசினார்கள். தலைவராக தேவராஜ், செயலாளராக பத்மநாபன், பொருளாளராக சந்திரன் உள்பட பலர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கூட்டத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காப்பீடு திட்டத்தை அரசு ஏற்க வேண்டும், மின்சார சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர்களுக்கு அகவிலைப்படி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


Next Story