பாறை உடைக்க பயன்படுத்திய எந்திரம் பறிமுதல்
பாறை உடைக்க பயன்படுத்திய எந்திரம் பறிமுதல்
கன்னியாகுமரி
களியக்காவிளை:
களியக்காவிளை அருகே உள்ள அதங்கோடு பகுதிகளில் அனுமதியின்றி பாறை உடைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது, அங்கு தனியாருக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி பாறை உடைப்பது தெரியவந்தது. மேலும், போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பியோடி விட்டனர். இதையடுத்து போலீசார் பாறை உடைக்க பயன்படுத்திய எந்திரத்தை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story