தேனியில் பரபரப்பு:கேரள வியாபாரியை தாக்கி பணம், செல்போன் பறிப்பு


தேனியில் பரபரப்பு:கேரள வியாபாரியை தாக்கி பணம், செல்போன் பறிப்பு
x
தினத்தந்தி 15 April 2023 12:15 AM IST (Updated: 15 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் கேரள வியாபாரியை தாக்கி பணம், செல்ேபான் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே பூப்பாறையை சேர்ந்த முகமது மகன் அன்சாரி (வயது 39). இவர் ஊறுகாய் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று அதிகாலை இவர், தேனி புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். புதிய பஸ் நிலையம் நுழைவு வாயில் அருகில் சென்ற போது 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தனர். அவர்கள் பீர் பாட்டிலைக் கொண்டு அன்சாரியை தாக்கி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.3 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

காயம் அடைந்த அன்சாரி அந்த வழியாக சென்றவர்கள் உதவியுடன் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் 4 பேரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அதிகாலை நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story