காட்டெருமைகள் சண்டையிட்டதால் பரபரப்பு
காட்டெருமைகள் சண்டையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி
கோத்தகிரி,
கோத்தகிரி பகுதியில் சமீப காலமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் புனித லூக்கா ஆலயம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் 2 காட்டெருமைகள் உலா வந்தன. பின்னர் காட்டெருமைகள் ஒன்றோடொன்று கொம்புகளால் தாக்கி சண்டையிட்டது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். அந்த வழியாக நடந்து சென்றவர்கள் சற்று தொலைவில் பாதுகாப்பாக நின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ½ மணி நேரத்திற்கு பிறகு காட்டெருமைகள் அருகே உள்ள தேயிலை தோட்டத்திற்குள் சென்றன. அப்பகுதி மக்கள் கூறும்போது, நகரின் முக்கிய சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் காட்டெருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story