விழுப்புரம் அருகே நிலத்தில் தவறி விழுந்த விவசாயி சாவு
விழுப்புரம் அருகே நிலத்தில் தவறி விழுந்த விவசாயி உயிரிழந்தாா்.
விழுப்புரம்
விழுப்புரம் அருகே உள்ள பில்லூரை சேர்ந்தவர் முருகன்(வயது 44). விவசாயியான இவர் நேற்று முன்தினம் அதே கிராமத்தில் உள்ள தனது நிலத்திற்கு சென்று வருவதாக கூறி சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை தேடி சென்றபோது அங்கு வேறு நபரின் நிலத்தில் உள்ள சேற்றில் விழுந்து இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்த தகவலின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் நிலத்தில் தடுமாறி விழுந்து சேற்றில் சிக்கி இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story