டிராக்டர் சக்கரத்தில் சிக்கி விவசாயி பலி


டிராக்டர் சக்கரத்தில் சிக்கி விவசாயி பலி
x

டிராக்டர் சக்கரத்தில் சிக்கி விவசாயி பலியானார்.

புதுக்கோட்டை

அரிமளம் அருகே ஆயிங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 43). விவசாயி. இவர் டிராக்டர் வைத்து வயல்களில் உழவு செய்யும் பணி செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பழனியப்பன் டிராக்டரை எடுத்துக்கொண்டு வயலில் உழவுசெய்ய சென்றுள்ளார். அப்போது டிராக்டர் பழுது ஏற்பட்டதால் டிராக்டர் அடியில் படுத்துக்கொண்டு அதை சரி செய்து உள்ளார். அப்போது திடீரென டிராக்டர் ஸ்டாட் ஆகி பழனியப்பன் தலையில் ஒரு சக்கரம் ஏறி இறங்கியது. இதில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே பழனியப்பன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அரிமளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story