பகண்டை கூட்டுரோடு அருகேதீயில் கருகி விவசாயி பலி


பகண்டை கூட்டுரோடு அருகேதீயில் கருகி விவசாயி பலி
x
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பகண்டை கூட்டுரோடு அருகே தீயில் கருகி விவசாயி பலியானார்.

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்,

பகண்டை கூட்டுரோடு அருகே பெரிய கொள்ளியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆதிமூலம் (வயது 80), விவசாயி. இவர் சம்பவத்தன்று தனக்கு சொந்தமான வயலில் கிடந்த கரும்பு சோகைகளை தீயிட்டு எரித்தார். அப்போது ஏற்பட்ட புகையால் ஆதிமூலத்துக்கு மயக்கம் ஏற்பட்டு, தீயில் விழுந்து விட்டார். இதில் பலத்த தீக்காயமடைந்து உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஆதிமூலம் நேற்று உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டு ரோடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story